படம் | AP
கிரிக்கெட்

ஓவல் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்தியா 224 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இணையதளச் செய்திப் பிரிவு

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 31) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

கருண் நாயர் அரைசதம்; கஸ் அட்கின்சன் 5 விக்கெட்டுகள்

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 224 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 ரன்கள் எடுத்தும், கே.எல்.ராகுல் 14 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். சாய் சுதர்சன் 38 ரன்கள், ஷுப்மன் கில் 21 ரன்கள் எடுத்தனர்.

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கருண் நாயர் 109 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் அடங்கும். துருவ் ஜுரெல் 19 ரன்கள், வாஷிங்டன் சுந்தர் 26 ரன்கள் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய கஸ் அட்கின்சன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜோஷ் டங் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

ஆட்டத்தின் இரண்டாம் நாளான இன்று (ஆகஸ்ட் 1) இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

The Indian team was bowled out for 224 runs in the first innings of the last Test match against England.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 9

“வண்டிய நிறுத்துங்க..!” மதுபோதையில் அரசுப் பேருந்து ஓட்டுநர்! பயணிகள் சாலை மறியல்!

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 8

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 7

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 6

SCROLL FOR NEXT