முகமது சிராஜ் படம் | AP
கிரிக்கெட்

ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்து 164 ரன்கள் குவிப்பு; வெற்றி யாருக்கு?

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இரண்டாவது இன்னிங்ஸில் உணவு இடைவேளையின்போது, இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இரண்டாவது இன்னிங்ஸில் உணவு இடைவேளையின்போது, இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 224 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

23 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, 396 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி 373 ரன்கள் முன்னிலை பெற, இங்கிலாந்து அணிக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்திருந்தது. பென் டக்கெட் 34 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

பென் டக்கெட் அரைசதம்; வெற்றி யாருக்கு?

வெற்றி பெற கடைசி இரண்டு நாள்களில் 324 ரன்கள் தேவை என்ற நிலையில், நான்காம் நாள் ஆட்டத்தை இங்கிலாந்து தொடர்ந்தது.

பென் டக்கெட்டுடன் ஆலி போப் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினர். இருப்பினும், ஆலி போப் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய பென் டக்கெட் அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். அவர் 83 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் அடங்கும்.

இதனையடுத்து, ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஜோடி சேர்ந்தனர். ஜோ ரூட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த ஹாரி ப்ரூக் அதிரடியாக விளையாடி வருகிறார். உணவு இடைவேளையின்போது, இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 23 ரன்களுடனும், ஹாரி ப்ரூக் 38 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இங்கிலாந்தின் வெற்றிக்கு இன்னும் 210 ரன்களும், இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 6 விக்கெட்டுகளும் (காயம் காரணமாக கிறிஸ் வோக்ஸ் பேட்டிங்குக்கு வரமாட்டார்) தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.

During the lunch break in the second innings of the final Test against India, England had scored 164 runs for the loss of 3 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனல் பறக்கும் கலைப்படைப்பு... பைசன் படத்தைப் புகழ்ந்த தயாரிப்பாளர்!

நான் பார்த்த மிகச் சிறந்த டெஸ்ட் தொடர் இதுதான்: இங்கிலாந்து பயிற்சியாளர்

தங்கம் ரூ.800 உயர்ந்த நிலையில் வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000ஆக உயர்வு!

சிபு சோரன் உடல் சொந்த ஊரில் தகனம்: லட்சக்கணக்கானோர் அஞ்சலி!

பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!

SCROLL FOR NEXT