இந்தியா ஏ, ஆஸி. ஏ மகளிரணி கேப்டன்கள்.  படம்: பிசிசிஐ வுமன்.
கிரிக்கெட்

மூவர் அரைசதம்: ஆஸி.யை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா ஏ மகளிரணி!

இந்தியா ஏ மகளிரணி பெற்ற த்ரில் வெற்றி குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

ஆஸ்திரேலியா ஏ மகளிரணியை 49.5ஆவது ஓவரில் வீழ்த்தி இந்தியா ஏ மகளிரணி தொடரைக் கைப்பற்றியது.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய மகளிரணி 3 டி20 போட்டிகளில் 0-3 எனத் தோல்வியுற்றது. அடுத்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.

முதல் ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி இரண்டாவது போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸி. அணி 265/9 ரன்கள் எடுத்தது.

இதில் அதிகபட்சமாக அலீஸா ஹீலி 91 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் மின்னு 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

அடுத்து விளையாடிய இந்திய அணி 49.5 ஓவரில் 266/8 ரன்கள் எடுத்து வென்றது.

இதில் அதிகபட்சமாக யஷ்டிகா 66, ராதா யாதவ் 60, தனுஜா 50 ரன்கள் அடித்து அசத்தினார்.

கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவையான நிலையில் முதல் பந்தில் தனுஜா 50 ரன்களில் இருக்கும்போது ஆட்டமிழந்தார்.

8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி அடுத்து 0,1, 2, 1என 5 பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இத்துடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக திட்டங்களை காப்பி - பேஸ்ட் செய்யும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி

தூய்மைப் பணியாளர்கள் விவகாரம்: கூட்டணியில் இருந்து விசிக, சிபிஎம் வெளியேருமா? - Tamilisai

ஒரு குடும்பத்தில் பெண்/ஆண் குழந்தைகளே பிறப்பது அதிர்ஷ்டமா? அறிவியலா? ஹார்வர்டு பல்கலை ஆய்வு

தமிழர்கள் மீது வெறுப்பு? ஆளுநரா? பாஜக தலைவரா? கனிமொழி எம்.பி. ஆவேசம்!

சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT