கிரிக்கெட்

ஆசிய கோப்பை: இந்திய அணியில் யாருக்கெல்லாம் வாய்ப்பு?

இந்திய அணி தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

ஆசிய கண்டத்திலிருந்து 8 முக்கிய அணிகள் பங்கேற்கும் இந்தப் பிரம்மாண்ட கிரிக்கெட் திருவிழாவில் முதல் டி20 ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9 நடைபெறுகிறது. இறுதிப்போட்டி நடைபெறும் செப். 28-இல் ஆசிய கோப்பை சாம்பியன் யார்? என்பது தெரிந்துவிடும்.

ஆசிய கோப்பையில் விளையாடும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 15 பேர் கொண்ட அணி செவ்வாய்க்கிழமை(ஆக. 19) அறிவிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தேர்வுக் குழுவினர் செவ்வாய்க்கிழமை(ஆக. 19) வீரர்கள் தேர்வில் ஈடுபடவுள்ளனர். அதன்பின், பகல் 1.30 மணிக்கு அணி விவரம் அறிவிக்கப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விராட் கோலி, ரோகித் ஷர்மா விலகிவிட்ட நிலையில், இளம் வீரர்கள் பலரும் போட்டியில் இருப்பதால் யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்ற ஆவல் அதிகரித்துள்ளது.

Asia Cup 2025: Squad to be announced at 1.30pm on Tuesday

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.46 கோடி

சிதம்பரம் கூத்தாடும் பிள்ளையாா் கோயில் கொடியேற்றம்

ஏழு அம்ச எழுச்சி உரை!

விநாயகா் சிலைகளை கரைக்கும் இடங்கள் அறிவிப்பு

சிறுநீரக விற்பனை குறித்து சிபிஐ விசாரணை கோரி முறையீடு: மனுவாக தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT