முகப்பு
கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை: நமீபியாவுடனான போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு?

நமீபியாவுடனான போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா?

Updated On : 11 பிப்ரவரி 2026, 12:23 pm IST
சஞ்சு சாம்சன் (கோப்புப் படம்)
பகிர்:

டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றில் நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் குரூப் சுற்றில் அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர்.

இந்த நிலையில், வயிற்று தொற்று காரணமாக அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் இன்று டிஸ்சார்ஜாகி நாளை நமீபியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவது சந்தேகமே.

Advertisement

Advertisement

இதனால், அபிஷேக் சர்மாவுக்கு மாற்று வீரராக சஞ்சு சாம்சன் களமிறக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக நியூசிலாந்து அணியுடன் நடைபெற்ற டி20 தொடரில் களமிறக்கப்பட்ட சஞ்சு சாம்சன் பெரும் ஏமாற்றம் அளித்தார்.

இதனால், டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் அபிஷேக் சர்மாவுடன் இஷான் கிஷனை இந்திய அணி களமிறக்கியது குறிப்பிடத்தக்கது.

summary

T20 World Cup: Will Sanju Samson have a chance in the match against Namibia?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.