ஆசியக் கோப்பைக்கான ஓமன் அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த அணியின் கேப்டனாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜதீந்தர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் வருகிற செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.
ஏற்கனவே, இந்தியா, பாகிஸ்தான் உள்பட 5 அணிகள் தங்களது வீரர்கள் விவரத்தை அறிவித்துள்ள நிலையில், 6-வது அணியாக ஓமன் அணியும் தங்களது 17 பேர் கொண்ட குழுவை அறிவித்துள்ளது.
இந்த அணிக்கு இலங்கையைச் சேர்ந்த முன்னாள் பேட்டரான துலீப் மெண்டிஸ் தலைமைப் பயிற்சியாளராகவுள்ளார்.
இதுகுறித்து துலீப் மெண்டிஸ் கூறுகையில், “ஆசியக் கோப்பைத் தொடர் எங்களது மிகச் சிறந்த அனுபவமாக இருக்கும். மேலும், எங்களது திறமையை உலகளவில் வெளிப்படுத்த இதுவே சிறந்த தருணம்.
இந்தியா, பாகிஸ்தான் போன்ற பலம் பொருந்திய அணிகளுக்கு எதிராக விளையாடும் எந்த வீரருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். டி20 போன்ற ஆட்டங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” எனத் தெரிவித்தார்.
ஓமன் அணியின் கேப்டனாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜதீந்தர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஓமன் அணி, இந்தத் தொடரில் செப்டம்பர் 12 ஆம் தேதி பாகிஸ்தானுடனும், செப்டம்பர் 15 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்துடனும் செப்டம்பர் 19 ஆம் தேதி இந்தியாவுடனும் விளையாடவுள்ளது.
ஓமன் அணி விவரம்
ஜதீந்தர் சிங் (கேப்டன்), ஹம்மத் மிர்சா, விநாயக் சுக்லா, சுஃப்யான் யூசுப், ஆஷிஷ் ஒடெடெரா, அமீர் கலீம், முகமது நதீம், சுஃப்யான் மெஹ்மூத், ஆர்யன் பிஸ்ட், கரண் சோனாவலே, ஜிக்ரியா இஸ்லாம், ஹஸ்னைன் அலி ஷா, பைசல் ஷா, முகமது இம்ரான், நதீம் கான், ஷக்கீல் அகமது, சாமே ஸ்ரீவஸ்தவா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.