தமிழக கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் திரிபுரா அணியில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புச்சி பாபு கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் லெவனில் விளையாடி வந்த, தமிழக அணியின் முன்னாள் கேப்டன் விஜய் சங்கர் திடீரென விலக முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அணிக்காக ரஞ்சி டிராபி, ஐபிஎல் தொடரில் குஜராத் மற்றும் தற்போது சென்னை அணிக்காக விளையாடி வரும் விஜய் சங்கர் 2011 - 2012 ஆம் ஆண்டில் தமிழக அணிக்காக முதல்தரப் போட்டிகளில் அறிமுகமானார்.
மகாராஷ்டிரத்துக்கு எதிரான புச்சி பாபு போட்டியின் 34 வயதான விஜய் சங்கருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்தாண்டு, முதல் இரண்டு ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாட தவறிய விஜய் சங்கர், சையத் முஷ்டாக் அலி டிராபியிலும் சில போட்டிகளைத் தவறவிட்டார்.
2024 - 2025 ரஞ்சி டிராபியில், சத்தீஸ்கர் மற்றும் சண்டீகருக்கு எதிரான இரண்டு சதங்கள் உள்பட அவர் 52.88 சராசரியுடன் 476 ரன்கள் எடுத்திருந்தார்.
கடந்தாண்டு மூத்த வீரரான பாபா அபராஜித், கேரளத்தில் சேர்ந்த பிறகு, தமிழக அணியில் வெளியேறும் 2-வது மூத்த வீரர் விஜய் சங்கர்.
இதுவரை 70 முதல் தரப் போட்டிகளில் விளையாடியுள்ள விஜய் சங்கர், 45.14 சராசரியில் 3,702 ரன்கள் எடுத்துள்ளார். அதில், 11 சதங்களுடன், 43 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.