தில்லி பிரீமியர் லீக்கில் திவ் வேஷ் ரதி ஓவரில் சிக்ஸர் அடித்து நோட்புக் செலிபிரேஷன் செய்த நிதீஷ் ரானா விடியீ வைரலாகி வருகிறது.
இந்தக் கொண்டாட்டத்தினால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தில்லி பிரீமியர் லீக்கில் எலிமினேட்டர் போட்டியில் வெஸ்ட் தில்லியும் சௌத் தில்லியும் மோதின.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சௌத் தில்லி 20 ஓவர்களுக்கு 201/5 ரன்கள் எடுத்தது.
அதில் அதிகபட்சமாக தேஜஸ்வி தாஹியா 60, அனுமோல் சர்மா 55, சுமித் மாதுர் 48 ரன்களும் எடுத்தார்கள்.
அடுத்து விளையாடிய வெஸ்ட் தில்லி 17.1 ஓவரில் 202/3 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
அதில் அதிகபட்சமாக நிதீஷ் ராணா 55 பந்துகளில் 134 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருது பெற்றார். இதில் 8 பவுண்டரிகள், 15 சிக்ஸர்கள் அடங்கும்.
இந்தப் போட்டியில் திக் வேஷ் ரதி பந்துவீச வரும்போது வேண்டுமென்றே திரும்பிச் செல்லுவார். பின்னர், அடுத்த பந்து அவர் வீச வரும்போது நிதீஷ் ராணா ஒதுங்கி விடுவார்.
அடுத்த பந்தை திக்வேஷ் வீசியபோது ரிவர்ஸ் ஸ்விட்சிட்டில் ஆடி ராணா சிக்ஸர் அடிப்பார்.
சிக்சர் அடித்த ராணா, திக்வேஷ் ரதியின் பிரபலமான ’நோட்புக் செலிஃபிரேஷன்’ கொண்டாட்டத்தை தனது பேட்டில் செய்து காட்டினார்.
இதனால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. அணியினர் இருவரையும் பிரித்து விட்டார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.