அபிஷேக் சர்மா போட்டியை வென்று கொடுப்பவர் எனவும், அவரது விக்கெட் தென்னாப்பிரிக்க அணிக்கு மிகவும் முக்கியம் எனவும் அந்த அணி வீரர் அய்டன் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்காவும், ஒருநாள் தொடரை இந்திய அணியும் வென்றன. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நாளை (டிசம்பர் 9) தொடங்குகிறது.
இந்த நிலையில், அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவின் விக்கெட் தங்களுக்கு மிகவும் முக்கியமான விக்கெட் என அய்டன் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: சன்ரைசர்ஸ் அணியில் அபிஷேக் சர்மாவுடன் இணைந்து விளையாடியுள்ளேன். அவர் மிகவும் அற்புதமாக விளையாடக் கூடியவர். அவரது விக்கெட் எங்களுக்கு மிகவும் முக்கியம் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. எந்த பந்துவீச்சாளர்கள் புதிய பந்தில் பந்துவீசினாலும் அபிஷேக் சர்மாவின் விக்கெட்டினை அவர்கள் விரைவில் வீழ்த்த வேண்டும்.
அபிஷேக் சர்மா போட்டியை வென்று கொடுப்பவர் என்பதால், அவரது விக்கெட் எங்களுக்கு மிகவும் முக்கியம். முதல் பந்திலிருந்தே அச்சமின்றி மிகவும் அதிரடியாக விளையாட அவருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இதையும் படிக்க: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இரட்டை சாதனை படைப்பாரா ஹார்திக் பாண்டியா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.