ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் இந்திய வீரர் விராட் கோலி இரண்டாம் இடத்துக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.
இதற்கு முன்பாக நான்காவது இடத்தில் இருந்தார். தற்போது, இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளார்.
டி20, டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா இருவருமே ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறார்கள்.
இருவருமே, ஒருநாள் போட்டிக்கான ஐசிசியின் தரவரிசையில் முதலிரண்டு இடங்களைப் பிடித்து அசத்தியுள்ளார்கள்.
2021க்குப் பிறகு விராட் கோலி நம்.1 இடத்துக்கு வரவே இல்லை. அதன்பிறகு பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் கோலியின் இடத்தைப் பிடித்திருந்தார்.
தற்போது, இந்தியாவின் ரோஹித் சர்மா முதலிடத்தில் நீண்ட நாள்களாக நீடிக்கிறார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் விராட் கோலி சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருது வென்றார்.
இதனைத் தொடர்ந்து தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசை
1. ரோஹித் சர்மா - 781 புள்ளிகள்
2. விராட் கோலி - 773 புள்ளிகள்
3. டேரில் மிட்செல் - 766 புள்ளிகள்
4. இப்ரஹிம் சத்ரான் - 764 புள்ளிகள்
5. ஷுப்மன் கில் - 723 புள்ளிகள்
6. பாபர் அசாம் - 722 புள்ளிகள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.