வெலிங்டனில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அசத்தல் வெற்றி பெற்றது.
நியூசிலாந்துக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள மே.இ.தீ. அணி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் அபாரமாக பேட்டிங் செய்து டிரா செய்தது.
இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் வெலிங்டனில் கடந்த டிச.9ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
மே.இ.தீ. அணி முதல் இன்னிங்ஸில் 205க்கு ஆல் அவுட்டாக, நியூசிலாந்து 278க்கு டிக்ளேர் செய்தது.
இரண்டாம் இன்னிங்ஸில் மே.இ.தீ. அணி 128-க்கு ஆல் அவுட்டாக நியூசிலாந்து 57/1 ரன்கள் எடுத்து எளிதாக வென்றது.
இரண்டாம் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுத்த ஜேக்கப் டஃபி ஆட்ட நாயகனாகத் தேர்வானார். இவருடன் மைக்கேல் ரே சிறப்பாக பந்து வீசுயதும் குறிப்பிடத்தக்கது.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என நியூசிலாந்து முன்னிலை வகிக்கிறது.
ஏற்கெனவே, டி20, ஒருநாள் தொடரை இழந்த மே.இ.தீ. அணி அடுத்த டெஸ்ட்டில் வென்றால் மட்டுமே தொடரை சமன்செய்ய முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.