மதீஷா பதிரானா (கோப்புப் படம்) 
கிரிக்கெட்

கடும் போட்டிக்கு இடையே ரூ.18 கோடிக்கு ஏலம்போன பதிரானா!

கடும் போட்டிக்கு இடையே இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளரான மதீஷா பதிரானா ரூ. 18 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

இணையதளச் செய்திப் பிரிவு

கடும் போட்டிக்கு இடையே இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளரான மதீஷா பதிரானா ரூ. 18 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ஐபிஎல் மினி ஏலம் அபுதாபியில் இன்று (டிசம்பர் 16) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அணிகள் ஆர்வத்துடன் தங்களுக்குத் தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்து வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான மதீஷா பதிரானாவை ஏலத்தில் எடுக்க அணிகளுக்குள் கடும் போட்டி நிலவியது. பதிரானாவை ஏலத்தில் எடுக்க தில்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இருப்பினும், ஒரு கட்டத்தில் தில்லி போட்டியிலிருந்து விலகியது.

இதனையடுத்து, லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே பதிரானாவை ஏலத்தில் எடுப்பதில் போட்டி தொடங்கியது.

இறுதியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 18 கோடிக்கு பதிரானாவை ஏலத்தில் எடுத்தது.

Amidst fierce competition, Sri Lankan fast bowler Matheesha Pathirana was acquired in the auction.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 9 கோடிக்கு கேகேஆர் அணியில் இணைந்த முஸ்தஃபிசூர் ரஹ்மான்!

2025-ல் இந்திய எல்லைகளில் நடந்த ஊடுருவல், கைது எத்தனை?

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்து ரூ. 91.01 ஆக நிறைவு!

ராஜஸ்தானில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: 42 லட்சம் பேர் நீக்கம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்த விக்னேஷ் புத்தூர்!

SCROLL FOR NEXT