பிரசாந்த் வீர் படம் | சிஎஸ்கே (எக்ஸ்)
கிரிக்கெட்

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

ஐபிஎல் மினி ஏலத்தில் இளம் ஆரவுண்டரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

IPL 2026 MINI AUCTION: ஐபிஎல் மினி ஏலத்தில் இளம் ஆரவுண்டரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 14 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

ஐபிஎல் மினி ஏலம் அபுதாபியில் இன்று (டிசம்பர் 16) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அணிகள் ஆர்வத்துடன் தங்களுக்குத் தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்து வருகின்றனர்.

இந்த மினி ஏலத்தில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதாகும் பிரசாந்த் வீர் என்ற இளம் ஆல்ரவுண்டரை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 14.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

இடதுகை பேட்டர் மற்றும் சுழற்பந்துவீச்சாளரான பிரசாந்த் வீர் உத்தரப் பிரதேச டி20 லீக் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

In the IPL mini-auction, Chennai Super Kings have acquired a young all-rounder.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT