கிரிக்கெட்

ஐபிஎல் மினி ஏலம்: முதல் செட்டில் விற்கப்படாமல் போன கான்வே, சர்ப்ராஸ், பிரித்வி ஷா!

மினி ஏலத்தில் முதல் செட்டில் விற்கப்படாமல் போன கான்வே, சர்ப்ராஸ், பிரித்வி ஷாவைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

ஐபிஎல் மினி ஏலத்தின் முதல் செட்டில் கான்வே, சர்ப்ராஸ், பிரித்வி ஷா விற்கப்படாமல் அன் சோல்ட் ஆகினர்.

அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இன்று (டிச.16) மதியம் தொடங்கியது.

ஐபில் தொடரின் 19 வது சீசன் அடுத்தாண்டு மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை நடைபெறுகிறது. இந்தத் தொடரின் மினி ஏலத்தில் பங்கேற்பதற்கான 369 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

அந்த வகையில் மினி ஏலத்தில் பங்கேற்கும் கொல்கத்தா அணியிடம் ரூ.64.30 கோடியும், குறைந்தபட்சமாக மும்பை அணியிடம் ரூ.2.75 கோடியும் கையிருப்பாக வைத்துள்ளது. அதேவேளையில், சென்னை (ரூ.43.40 கோடி), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ரூ.16.40 கோடி), ஹைதராபாத் (ரூ.25.50 கோடி), குஜராத் (ரூ.12.90 கோடி), ராஜஸ்தான் (ரூ. 16.05 கோடி), தில்லி (ரூ. 21.80 கோடி), லக்னௌ (ரூ. 22.95 கோடி), பஞ்சாப் (ரூ. 11.50 கோடி) தொகையை வைத்திருந்தன.

இந்த மினி ஏலத்தின் முதல் செட்டில் நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே, ஆஸ்திரேலியாவின் ஜேக் பிரேசர் மெக்கர்க், கேமரூன் கிரின், தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் ஆகியோர் ரூ. 2 கோடி அடிப்பட்டை விலையிலும், இந்திய வீரர்கள் சர்ஃப்ராஸ் கான், பிரித்வி ஷா உள்ளிட்டோர் ரூ.75 லட்சம் அடிப்படை விலையிலும் இடம்பெற்றிருந்தனர்.

முதல் வீரராக ஜேக் பிரேசர் மெக்கர்க்கின் பெயர் வாசிக்கப்பட்டது. அவரை யாரும் எடுக்க முன்வராததால் அவர் விற்கப்படாமல் போனார். அடுத்து டேவிட் மில்லரின் பெயர் வாசிக்கப்பட்டது.

அவரையும் வாங்க யாரும் ஆர்வம் காட்டவில்லை. கடைசியாக தில்லி அணி நிர்வாகம் தலையிட்டதால் அவரை அடிப்படை விலையிலேயே அவரை ஏலத்தில் எடுத்தது.

அவர்களைத் தொடர்ந்து இந்திய வீரர் பிரித்வி ஷாவையும் யாரும் எடுக்க முன்வரவில்லை. அவர் விற்பனை ஆகவில்லை. முன்னாள் சென்னை வீரர் டெவான் கான்வேயையும் யாரும் வாங்க முன்வரவில்லை. அதனால் அவரும் அன் சோல்ட் ஆனார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 ஆண்டுகளுக்குப் பின்.. சீனாவின் ஷாங்காய்க்கு ஏர் இந்தியா நேரடி விமான சேவை!

மத்திய பட்ஜெட் 2026-27: நிர்மலா சீதாராமனின் 83 நிமிட முழு உரை

மத்திய பட்ஜெட் 2026-27: தமிழ்நாட்டிற்கு கிடைத்த திட்டங்கள் என்ன?

மத்திய பட்ஜெட் 2026: தனிநபர் வருமான வரி; இதை கவனித்தீர்களா?

யு19 உலகக் கோப்பை: அரையிறுதியில் இந்தியா! பாகிஸ்தானை வெளியேற்றியது!

SCROLL FOR NEXT