பிரசாந்த் வீர் | ஆஃகிப் நபி தர் | கார்த்திக் சர்மா PTI
கிரிக்கெட்

ஐபிஎல் மினி ஏலம் - அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் யார்யார் தெரியுமா?

சென்னை சூப்பர் கிங்ஸ்(சிஎஸ்கே) அணியில் இருவர்...

இணையதளச் செய்திப் பிரிவு

ஐபிஎல் மினி ஏலம் செவ்வாய்க்கிழமை(டிச. 16) நடைபெற்றது. இந்தியா மட்டுமில்லாது உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள், பார்வையாளர்களிடம் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ள மினி ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் யார்யார்? என்ற விவரத்தை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இன்று (டிச.16) மதியம் தொடங்கியது.

  • அதில், அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டவர்களில் முதலிடத்தில் இருப்பவர் கேமரூன் கிரீன்.

    அவரை ரூ. 25. 20 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

  • இரண்டாமிடத்தில் மதீஷா பதிரானா உள்ளார்.

    அவரையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியே அதிக விலைக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. ரூ. 18 கோடிக்கு பதிரானா ஏலத்தில் வாங்கப்பட்டார்.

  • மூன்றாம், நான்காம் இடங்களில் இளம் வீரர்களான கார்த்திக் சர்மாவும் பிரசாந்த் வீரும் உள்ளனர்.

    அவர்களை அதிக விலைக்கு ஏலத்தில் எடுத்திருப்பது வேறு எவரும் அல்ல? நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ்(சிஎஸ்கே) அணியே! ரூ. 14.20 கோடிக்கு கார்த்திக் சர்மாவும் அதே விலைக்கு பிரசாந்த் வீரும் சிஎஸ்கே அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.

  • ஐந்தாமிடத்தில், இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டன் உள்ளார். அவரை ரூ. 13 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

அனைத்து அணிகளிலும் மாற்றங்கள் பல நிகழ்ந்துள்ளதால், 2026-இல் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சுவாரசியத்துக்கும் பரபரப்புக்கும் பஞ்சமிருக்காது என்றே தெரிகிறது. ஐபிஎல் அணிகள் ஏலத்தில் எடுத்துள்ள வீரர்களில், எந்தெந்த வீரர்களை விளையாடும் லெவனில் களமிறக்கி எதிரணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கப்போகிறது என்ற ஆவல் ஐபிஎல் ரசிகர்களிடையே இப்போதே அதிகரித்துவிடட்து.

Top buys of TATA IPL Auction 2026; your favourite bid!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

ராமபரிவாரங்கள் சேர்ந்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

SCROLL FOR NEXT