இந்தியா - தென்னாப்பிரிக்கா 4-ஆவது டி20 ரத்து :
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 4-ஆவது டி20 ஆட்டம் பனிமூட்டத்தால் ரத்தானது. லக்னௌ நகரிலுள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏக்னா கிரிக்கெட் திடலில் இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 4-ஆவது டி20 ஆட்டம் புதன்கிழமை(டிச. 17) மாலை நடைபெறவிருந்தது.
இந்தநிலையில், அங்கு பனிப்பொழிவு அதிகரித்ததால், ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்படுவதும் தாமதமானது. இதனையடுத்து, இடைவெளிவிட்டு 6 முறை பிட்ச்சுக்குச் சென்று நடுவர்கள் சோதனையிட்டனர். எனினும், பனியின் தாக்கம் அதிகரித்தே காணப்பட்டதால் ஆட்டம் ரத்தாவதாக அறிவிக்கப்பட்டது.
5 ஆட்டங்களைக் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகித்திருந்த நிலையில், இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டுள்ளதான் மூலம், இறுதி ஆட்டத்தில் இந்தியா தோல்வியுற்றாலும் இந்தத் தொடர் சமனிலேயே முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.