தென்னாபிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து துணை கேப்டன் ஷுப்மன் கில் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவருக்குப் பதிலாக தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் களமிறங்குவார் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் டெஸ்ட் கேப்டனாக இருக்கும் ஷுப்மன் கில் டி20 தொடரில் துணை கேப்டனாக இருக்கிறார்.
தொடர்ச்சியாக 18 போட்டிகளில் அரைசதம் கூட அடிக்காமல் மோசமான ஃபார்மில் இருக்கிறார்.
காலில் ஏற்பட்ட காயத்தினால் டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். புகைமூட்டத்தினால் ஆட்டம் தாமதமாக தொடங்கவிருக்கிறது.
2-1 என முன்னிலையில் இருக்கும் இந்திய அணி இந்தப் போட்டியில் வென்றால் தொடரை வெல்லும் வாய்ப்பிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.