ஐபிஎல் மினி ஏலம் 2025 : சிஎஸ்கே அணி ஐபிஎல் மினி ஏலத்தில் யாரையெல்லாம் எடுக்க திட்டமிருந்தது என்பதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஏலத்திற்கு முன்னதாகவே சிஎஸ்கே எடிட் செய்து பயன்படுத்த முடியாமல்போன போஸ்டர்கள், விடியோக்களை வெளியிட்டுள்ளது.
சிஎஸ்கே அணி துபையில் நடைபெற்ற ஏலத்தில் பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மா, மேத்திவ் ஷார்ட், அமன் கான், சர்ஃபராஸ் கான், மாட் ஹென்றி, ராகுல் சஹார், ஜாக் ஃபோக்ஸ் ஆகியோரை எடுத்தது.
இந்நிலையில், மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி எடுக்க விரும்பியும் முடியாமல்போன வீரர்கள் குறித்த போஸ்டர்கள், விடியோக்களை வெளியிட்டுள்ளது.
இனிமேல் இதைப் பயன்படுத்த முடியாது எனக் கூறி பதிரானா, ரச்சின் ரவீந்திரா, கேமரூன் கிரீன், வெங்கடேஷ் ஐயர், லியாம் லிவிஸ்டன், ஆகியோரின் புகைப்படங்கள், விடியோக்களை வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.