நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவை பாராட்டி இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நியூசிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பே ஓவலில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 462 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மேற்கிந்தியத் தீவுகள் அணி விளையாடி வருகிறது.
இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான டெவான் கான்வே இரட்டைச் சதம் மற்றும் சதம் விளாசி அசத்தினார். அவர் முதல் இன்னிங்ஸில் 227 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 100 ரன்களும் எடுத்தார்.
இந்த நிலையில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவான் கான்வேவை தனது எக்ஸ் தளப் பதிவின் மூலம் இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.
டெவான் கான்வேவை பாராட்டி எக்ஸ் தளத்தில் அஸ்வின் பதிவிட்டிருப்பதாவது: ஐபிஎல் ஏலத்தில் டெவான் கான்வே எந்த ஒரு அணியாலும் வாங்கப்படாமல் போயிருக்கலாம். ஆனால், அதனைப் பற்றி யோசிக்காமல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் மற்றும் சதம் விளாசி அசத்தியுள்ளார்.
இந்த உலகம் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறது என்பது நம்முடைய கைகளில் இல்லை. ஆனால், நம்முடைய ஆட்டத்தை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பது முற்றிலுமாக நம்முடைய தெரிவாக இருக்கிறது. நன்றாக விளையாடினீர்கள் டெவான் எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.