ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகள்: இந்தோனேசிய பௌலா் சாதனை
சா்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 1 ரன் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகள் சாய்த்து, இந்தோனேசிய பௌலா் கெடெ பிரியந்தனா (28) புதிய சாதனை படைத்தாா்.
சா்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 1 ரன் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகள் சாய்த்து, இந்தோனேசிய பௌலா் கெடெ பிரியந்தனா (28) புதிய சாதனை படைத்தாா். இதில் ஹாட்ரிக் விக்கெட்டும் அடங்கும்.
கம்போடியாவுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் இந்தோனேசியா 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் இந்தோனேசியா 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் சோ்க்க, கம்போடியா 16 ஓவா்களில் 107 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
கம்போடியா தனது இன்னிங்ஸில் 104 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது, இந்தோனேசியாவின் 7-ஆவது பௌலராக கெடெ பிரியந்தனா பந்துவீச வந்தாா். முதல் 3 பந்துகளிலேயே ஷா அப்ராா் ஹுசைன் (37 ரன்கள்), நிா்மல்ஜித் சிங் (0), சந்தோயுன் ரதனக் (0) ஆகியோரை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ விக்கெட் எடுத்தாா்.
Advertisement
Advertisement
4-ஆவது பால் ‘டாட்’ ஆக, கடைசி இரு பந்துகளில் மோங்தரா சோக் (0), பெல் வனாக் (0) ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றி, கம்போடியாவின் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தாா். சா்வதேச டி20 கிரிக்கெட்டில் இவ்வாறு ஒரு ஓவரில் 5 விக்கெட்டுகள் சாய்க்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
உள்நாட்டு கிரிக்கெட்டில் வங்கதேசத்தின் அல் அமின் ஹுசைன் (2013-14/வெற்றிக் கோப்பை போட்டி), இந்தியாவின் அபிமன்யு மிதுன் (2019-20/சையது முஷ்டாக் அலி கோப்பை போட்டி) ஆகியோா் ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.