இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆஷஸ் போட்டி தோல்வி குறித்து மீண்டும் பேசியுள்ளார்.
நான்காவது ஆஷஸ் போட்டியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் இல்லாமல் களமிறங்கும் இங்கிலாந்து அணிக்கு மீதமிருக்கும் 2 போட்டிகளில் வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா 3-0 என தொடரை வென்றது. பென் ஸ்டோக்ஸ் தலைமைப் பண்பும் மிகுந்த விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
வீரர்களின் மனநிலை முக்கியம்...
இங்கிலாந்து கேப்டனாக எனக்கு தற்போது வீரர்களின் மனநிலையை மிகவும் முக்கியம். என்னால் முடிந்த அளவுக்கு வீரர்களை அணியில் தக்க வைப்பேன்.
ஊடகங்கள் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களும் நம்மை விமர்சிக்கும்போது எதுவும் நல்லதாக அமையாது.
0-3 என தொடரை இழந்திருக்கும்போது, நீங்கள் எது பேசினாலும் எது செய்தாலும் கவனமாக ஆராயப்படும்.
இதுபோன்ற மிகப்பெரிய தொடரில் வரிசையாக மூன்றிலும் தோற்றால் நமக்கு சொல்வதற்குக் கூட காரணம் இருக்காது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.