இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - இலங்கை இடையேயான மூன்றாவது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று (டிசம்பர் 26) நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இலங்கை அணி முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் அதிகபட்சமாக இமெஷா துலானி 27 ரன்களும், ஹாசினி பெரேரா 25 ரன்களும் எடுத்தனர். கவிஷா தில்ஹாரி 20 ரன்கள், கௌஷானி 19 ரன்கள் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.
இந்தியா தரப்பில் ரேணுகா சிங் தாக்குர் 4 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.