சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்தியா - இலங்கை இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று (டிசம்பர் 26) திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்தப் போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் 150 விக்கெட்டுகளைக் கடந்து அவர் சாதனை படைத்தார்.
மேலும், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள ஆஸ்திரேலிய வீராங்கனை மேகன் ஷூட்டின் சாதனையை தீப்தி சர்மா சமன் செய்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் இவர்கள் இருவரும் தலா 151 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.
சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனைகள்
தீப்தி சர்மா (இந்தியா) - 151 விக்கெட்டுகள்
மேகன் ஷூட் (ஆஸ்திரேலியா) - 151 விக்கெட்டுகள்
நிடா தர் (பாகிஸ்தான்) - 144 விக்கெட்டுகள்
ஹென்ரியேட் இஷிம் (ருவாண்டா) - 144 விக்கெட்டுகள்
சோஃபி எக்கல்ஸ்டோன் (இங்கிலாந்து) - 142 விக்கெட்டுகள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.