ஆஷஸ் கிரிக்கெட் போட்டியில் ஆலன் பார்டர் சாதனையை ஸ்டீவ் ஸ்மித் முறியடித்தார்.
இருப்பினும் டான் பிராட்மேன் சாதனை முறியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மெல்போர்ன் டெஸ்ட்டில் ஸ்டீவ் ஸ்மித் இரண்டாவது இன்னிங்ஸில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இருப்பினும் அணியின் மற்ற வீரர்கள் அனைவரும் ஆட்டமிழந்து 132 ரன்கள் எடுத்தனர்.
இந்தப் போட்டியில் ஸ்மித் 24 ரன்கள் எடுத்திருந்தார். இதன்மூலம் ஆஷஸ் தொடரில் அதிக ரன்கள் குவித்த ஆஸ்திரேலியர்கள் பட்டியலில் ஆலன் பார்டர் சாதனையை ஸ்டீவ் ஸ்மித் முறியடித்தார்.
மொத்தமாக இதுவரை ஸ்மித் 3,553 ரன்கள் குவித்துள்ளார். சாராசரி 55. 51ஆக இருக்கிறது.
ஆஷஸ் தொடரில் அதிக ரன்கள் குவித்த ஆஸ்திரேலியர்கள்
1. டான் பிராட்மேன் - 5,028 (சராசரி - 89.78)
2. ஸ்டீவ் ஸ்மித் - 3,553 (சராசரி - 55. 51)
3. ஆலன் பார்டர் - 3,548 (சராசரி - 56.31)
டான் பிராட்மேன் இங்கிலாந்துக்கு எதிராக 19 சதங்கள், 12 அரைசதங்கள் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணி நான்காவது டெஸ்ட்டில் வெற்றிபெற இன்னும் 38 ரன்கள் தேவையாக இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.