ஸ்மிருதி மந்தனா படம் | பிசிசிஐ
கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட்டில் 10000 ரன்கள்; ஸ்மிருதி மந்தனா சாதனை!

சர்வதேச கிரிக்கெட்டில் 10000 ரன்களைக் கடந்து இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சாதனை படைத்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

சர்வதேச கிரிக்கெட்டில் 10000 ரன்களைக் கடந்து இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சாதனை படைத்துள்ளார்.

இந்தியா - இலங்கை இடையேயான 4-வது டி20 போட்டி நேற்று (டிசம்பர் 28) திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4-0 என்ற கணக்கில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

நேற்றையப் போட்டியில் இந்திய அணியும், தனிப்பட்ட முறையில் வீராங்கனைகளும் பல்வேறு சாதனைகளைப் படைத்தனர். நேற்றையப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது. டி20 போட்டிகளில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

அதுமட்டுமின்றி, தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா முதல் விக்கெட்டுக்கு 162 ரன்கள் சேர்த்தனர். டி20 கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டுக்கு இந்திய அணி குவித்த அதிகபட்ச ரன்கள் இதுவாகும். இதற்கு முன்பாக, கடந்த 2019 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 போட்டியில் ஸ்மிருதி மந்தனா - ஷஃபாலி வர்மா இணை முதல் விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்திருந்ததே இதுவரையிலான அதிகபட்சமாக இருந்தது.

10000 ரன்களைக் கடந்த ஸ்மிருதி மந்தனா

இலங்கைக்கு எதிரான நேற்றையப் போட்டியில் 80 ரன்கள் எடுத்ததன் மூலம், சர்வதேச போட்டிகளில் 10000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை படைத்துள்ளார்.

இந்திய அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் 10000 ரன்களைக் கடந்த இரண்டாவது வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். சர்வதேசப் போட்டிகளில் 10000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை முன்னாள் வீராங்கனை மிதாலி ராஜையேச் சேரும்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்துள்ள வீராங்கனைகள்

மிதாலி ராஜ் (இந்தியா) - 10868 ரன்கள்

சூஸி பேட்ஸ் (நியூசிலாந்து) - 10652 ரன்கள்

சார்லோட் எட்வர்ட்ஸ் (இங்கிலாந்து) - 10273 ரன்கள்

ஸ்மிருதி மந்தனா (இந்தியா) - 10053 ரன்கள்

ஸ்டஃபானி டெய்லர் (மே.இ.தீவுகள்) - 9301 ரன்கள்

மெக் லானிங் (ஆஸ்திரேலியா) - 8352 ரன்கள்

இதுவரை இந்திய அணிக்காக 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 629 ரன்களும், 117 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5322 ரன்களும் மற்றும் 157 டி20 போட்டிகளில் விளையாடி 4102 ரன்களும் ஸ்மிருதி மந்தனா குவித்துள்ளார்.

இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசியுள்ள கேப்டன் ஹர்மன்பிரீத் கௌரின் சாதனையையும் ஸ்மிருதி மந்தனா முறியடித்துள்ளார். ஹர்மன்பிரீத் கௌர் 78 சிக்ஸர்கள் விளாசியுள்ள நிலையில், ஸ்மிருதி மந்தனா 80 சிக்ஸர்கள் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

The Indian player has created a record by crossing 10,000 runs in international cricket.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பத்தூரில் ஜன.2-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

மேல்பாடியில் சிப்காட் அமைப்பதை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை: ஆட்சியரிடம் மனு

இந்தியாவில் சிறுபான்மையினர் குறிவைக்கப்படுகிறார்களா? பாகிஸ்தான் குற்றச்சாட்டு - மத்திய அரசு நிராகரிப்பு!

ஆலங்குளம் அருகே இலவச கண் பரிசோதனை முகாம்

உன்னாவ் வழக்கு : தூக்கு தண்டனை வழங்கும் வரை ஓய்வு இல்லை - பாதிக்கப்பட்ட பெண்!

SCROLL FOR NEXT