அலெக்ஸ் கேரி, ஸ்டீவ் ஸ்மித் 
கிரிக்கெட்

2ஆம் நாள் முடிவு: இருவர் சதம், 73 ரன்கள் முன்னிலையில் ஆஸி.!

இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் ஆஸி. அணி 73 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

DIN

இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் ஆஸி. அணி 73 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

காலே திடலில் நேற்று (பிப்.6) தொடங்கிய 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 257 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதைத் தொடர்ந்து விளையாடிவரும் ஆஸி. அணி முதல் இன்னிங்ஸில் 2ஆம் நாள் முடிவில் 330/3 ரன்கள் எடுத்துள்ளது.

ஏற்கனவே தொடரில் 1-0 என ஆஸி. முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இருவர் சதம்

ஆஸி. அணியில் தொடக்க வீரர்களில் ஹெட், பின்னர் வந்த லபுஷேன் சுமாரான தொடக்கம் அளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்து விளையாடிய ஸ்மித், கவாஜா ஓரளவுக்கு ரன்கள் குவித்தனர்.

கடந்த போட்டியில் இரட்டைச் சதமடித்த கவாஜா 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்மித், அலெக்ஸ் கேரி அற்புதமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். இருவரும் சதமடித்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார்கள்.

ஆஸி. ஸ்கோர் கார்டு

டிராவிஸ் ஹெட் - 21

உஸ்மான் கவாஜா - 36

மார்னஸ் லபுஷேன் - 4

ஸ்டீவ் ஸ்மித் -120*

அலெக்ஸ் கேரி - 139*

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கிரிக்கெட் அணியின் பிரதான விளம்பரதாரா் அப்போலோ டையா்ஸ்- ரூ.579 கோடிக்கு ஒப்பந்தம்

சரக்கு வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சிவகங்கையில் செப்.19-இல் வேலைவாய்ப்பு முகாம்

புகையிலைப் பொருள்களை விற்றவா் கைது

மதுப் புட்டிகளை பதுக்கியவா் கைது

SCROLL FOR NEXT