அலெக்ஸ் கேரி படம் | AP
கிரிக்கெட்

ஆடம் கில்கிறிஸ்ட் சாதனையை முறியடித்த அலெக்ஸ் கேரி!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்டின் சாதனையை அலெக்ஸ் கேரி முறியடித்துள்ளார்.

DIN

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்டின் சாதனையை அலெக்ஸ் கேரி முறியடித்துள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய இலங்கை அணி 257 ரன்களில் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 414 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினர். ஸ்டீவ் ஸ்மித் 131 ரன்களும் (10 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்), அலெக்ஸ் கேரி 156 ரன்களும் (15 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) எடுத்தனர்.

ஆடம் கில்கிறிஸ்ட் சாதனை முறியடிப்பு

இலங்கைக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் 156 ரன்கள் எடுத்ததன் மூலம், ஆசியாவில் டெஸ்ட் போட்டி ஒன்றில் அதிக ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் என்ற ஆடம் கில்கிறிஸ்டின் சாதனையை அலெக்ஸ் கேரி முறியடித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, இலங்கை மற்றும் வங்கதேசத்துக்கு எதிராக ஆடம் கில்கிறிஸ்ட் 144 ரன்கள் எடுத்திருந்ததே, ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஒருவரால் டெஸ்ட் போட்டி ஒன்றில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இருந்தது. அந்த சாதனையை தற்போது அலெக்ஸ் கேரி முறியடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

சீா்காழி: வாகனத்தில் டீசல் திருட்டு

SCROLL FOR NEXT