பெண் குழந்தைக்கு தந்தையானார் பாட் கம்மின்ஸ் படங்கள்: இன்ஸ்டா / பாட் கம்மின்ஸ்
கிரிக்கெட்

பெண் குழந்தைக்கு தந்தையானார் பாட் கம்மின்ஸ்..!

ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ்-பெக்கி தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

DIN

ஆஸி. டெஸ்ட், ஒருநாள் போட்டிகளின் கேப்டன் பாட் கம்மின்ஸ்-பெக்கி தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இது இவர்களது 2ஆவது குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

பார்டர்-கவாஸ்கர் தொடரில் சிறப்பாக விளையாடி கோப்பையை வென்ற கேப்டன் பாட் கம்மின்ஸ் மனைவி கற்பமாக இருப்பதால் இலங்கை தொடரில் பங்கேற்கவில்லை.

பின்னர், காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சியளித்தார்.

கம்மின்ஸுக்குப் பதிலாக ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் பாட் கம்மின்ஸின் மனைவி தனது இன்ஸ்டா பக்கத்தில் குழந்தையின் புகைப்படத்தைப் பதிவிட்டு, “எங்களுடைய அழகான பெண் குழந்தை, எடித். நாங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாகவும் காதலுடனும் இப்போது இருக்கிறோமென என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.

முதல் குழந்தை பிறந்தபோது அவரால் குடும்பத்துடன் இருக்க முடியவில்லை என்பதால் இந்தமுறை தவறவிடக்கூடாதெனவும் குடும்பத்துக்கு முன்னுரிமை அளிப்பதாக பாட் கம்மின்ஸ் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

கிரிக்கெட், குடும்பம் இரண்டையும் சமநிலையாக அனைத்து வீரர்களுக்கும் இருக்க வேண்டுமென கம்மின்ஸ் தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார்.

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் அவருக்கு மதிப்பளித்தது அவர்களிடையே நல்லுறவை பலப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT