ஷுப்மன் கில் படம்: ஏபி
கிரிக்கெட்

ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த ஷுப்மன் கில்..! டாப் 10இல் 4 இந்தியர்கள்!

ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவைச் சேர்ந்த ஷுப்மன் கில் முதலிடம் பிடித்துள்ளார்.

DIN

ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவைச் சேர்ந்த ஷுப்மன் கில் முதலிடம் பிடித்துள்ளார்.

25 வயதாகும் ஷுப்மன் கில் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தொடர் நாயகன் விருதுபெற்றதால் ஷுப்மன் கில் ஐசிசி தரவரிசையில் முன்னிலை பெற்றுள்ளார்.

சமபியன்ஸ் டிராபி போட்டிகள் இன்று முதல் (பிப்.19) பாகிஸ்தானில் தொடங்குகின்றன.

இந்தியாவுக்கான போட்டிகள் துபையில் நடைபெறுகின்றன. இந்தியாவின் முதல் போட்டி நாளை (பிப்.20) தொடங்குகின்றன.

டாப் 10இல் 4 இந்தியர்கள் இடம் பிடித்துள்ளார்கள். இதனால் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் அணியாக இருக்கிறது. இதே ஃபார்மை தொடர்ந்தால் இந்திய அணி நிச்சயமாக சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல வாய்ப்பிருக்கிறது.

ஐசிசி ஒருநாள் பேட்டர்கள் தரவரிசை

1. ஷுப்மன் கில் - 796 புள்ளிகள் (இந்தியா)

2. பாபர் அசாம் - 773 புள்ளிகள்

3. ரோஹித் சர்மா - 761 புள்ளிகள் (இந்தியா)

4. ஹென்ரிச் கிளாசன் - 756 புள்ளிகள்

5. டேரில் மிட்செல் - 740 புள்ளிகள்

6. விராட் கோலி - 721 புள்ளிகள் (இந்தியா)

7. ஹாரி டெக்டர் - 716 புள்ளிகள்

8. சரிதா அசலங்கா - 696 புள்ளிகள்

9. ஸ்ரேயாஸ் ஐயர் - 679 புள்ளிகள் (இந்தியா)

10. ஷாய் ஹோப் - 672 புள்ளிகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் அண்ணன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் பிறந்த மண்! - மதுரை குறித்து Vijay | TVK

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளம்பெண்ணைக் குறிப்பிட்ட விஜய்!

இந்திய டி20 அணியில் இடம்பெறாதது குறித்து ஷ்ரேயாஸ் தந்தை வேதனை

தமிழக குழந்தைகளுக்குத் தாய்மாமன்! விஜய் பேச்சு

சாம்சன் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா.. யாரும் எதிர்பார்க்காத அதிரடி தள்ளுபடியில்!

SCROLL FOR NEXT