வருண் சக்கரவர்த்தி எடுத்த விக்கெட்டை கொண்டாடும் இந்திய அணி.  படம்: ஏபி
கிரிக்கெட்

சொந்த அணியை நம்பாத வருண் சக்கரவர்த்தி..! மனம் திறந்த ரோஹித் சர்மா!

தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தியைப் பாராட்டி பேசியுள்ளார் கேப்டன் ரோஹித் சர்மா.

DIN

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தியைப் பாராட்டி பேசியுள்ளார். அவரது பந்துவீச்சு நுணுக்கங்களை சொந்த அணியிடம்கூட காண்பிப்பதில்லை எனக் கூறியுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் நேற்று (பிப்.19) பாகிஸ்தானில் தொடங்கின. இந்தியாவிற்கான போட்டிகள் துபையில் நடைபெறவிருக்கின்றன.

இந்தியாவின் முதல் போட்டி இன்று மதியம் தொடங்குகிறது. வங்கதேசத்துடன் விளையாடவிருக்கிறது.

இந்திய அணியில் ஜஸ்பிரீத் பும்ரா இல்லாதது பின்னடைவாக பார்க்கப்பட்டாலும் ஷமி, வருண் சக்கரவர்த்தி இருப்பது ஆறுதலாக இருக்கிறது.

ஒரேயொரு ஒருநாள் போட்டி மட்டுமே விளையாடியுள்ள வருண் லிஸ்ட் ஏ தொடரில் அசத்தியுள்ளார். 24 போட்டிகளில் 60 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

சொந்த அணியை நம்பாத வருண் சக்கரவர்த்தி

இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

வலைப்பயிற்சியில் வருண் வித்தியாசமான பந்துகளை அதிகமாக வீசவில்லை. ஒரேமாதிரியான பந்துகளை மட்டுமே வீசினார். அநேகமாக எங்களிடம் கூட அவரது மாறுபட்ட பந்துகளை காண்பிக்க விரும்பவில்லை போலிருக்கிறது. ஆனால், அதுவும் நல்ல விஷயம்தான்.

வருண் சக்கரவர்த்தி

வருண் தனக்கென்று சில ஆயுதங்களை வைத்துள்ளார். அதை களத்தில் மட்டுமே உபயோகிக்க நினைக்கிறார். அவர் அப்படி செய்தால் அவரை விடவும் நான் மிகவும் மகிழ்வேன் என்றார்.

அவரிடம் ஏதோ புதியதாக இருக்கிறது. அதனால்தான் அவர் இங்கு அணியில் இருக்கிறார். கடந்த 8-9 மாதங்களாக சிறப்பாக பந்து வீசியுள்ளார். இந்தியாவுக்காக மிகப்பெரிய போட்டிகளில் அவரால் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்க்கவே அவரை இங்குக் கூட்டி வந்துள்ளோம் எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்னேரி அருகே அந்தரத்தில் தொங்கிய அரசுப் பேருந்து!

உத்தரகண்ட் மேகவெடிப்பு: 2 பேர் மாயம்! மீட்புப் பணியில் ராணுவம்!

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்: மீண்டும் சொன்ன டிரம்ப்! ஆனால் இந்த முறை..

தமிழக முதல்வா் மீண்டும் ஸ்டாலின்தான்: அமைச்சர் கே.என். நேரு திட்டவட்டம்

விஷ்ணு விஷாலின் ஆர்யன் ரிலீஸ் அப்டேட்!

SCROLL FOR NEXT