தனது ரசிகர்கள் மீண்டும் கிடைத்துவிட்டதாக உணர்வதாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸிலிருந்து மீண்டும் மும்பை அணியில் ஹார்திக் பாண்டியா இணைந்தார். மீண்டும் மும்பை அணியில் இணைந்த அவர் அந்த அணியை கேப்டனாக வழிநடத்தினார்.
மும்பை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு, ஹார்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மும்பை அணியின் போட்டிகளின்போது, ஹார்திக் பாண்டியா ரசிகர்களின் கிண்டல், கேலிகளுக்கு ஆளானார்.
இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் டாப் 5 தனிநபர் அதிகபட்ச ஸ்கோர்கள்!
ஹார்திக் பாண்டியா கூறியதென்ன?
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்கு முன்பாக பேசிய ஹார்திக் பாண்டியா, தனது ரசிகர்கள் மீண்டும் கிடைத்துவிட்டதாக உணர்வதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள விடியோவில் அவர் பேசியிருப்பதாவது: எனது வாழ்க்கை முழுமையாக மாறியுள்ளதாக ரசிகர்கள் கூறுகிறார்கள். பழைய நினைவுகளை நான் திரும்பிப் பார்க்கத் தேவையில்லை எனவும் கூறுகிறார்கள். எனது ரசிகர்கள் எனக்கு மீண்டும் கிடைத்துவிட்டதாக உணர்கிறேன். புது ஆண்டு, புதிய தொடர், புதிய சவால்கள் எங்களுக்காக காத்திருக்கின்றன. மீண்டும் ஐசிசி சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்பதே எங்கள் இலக்கு என்றார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பாக செயல்பட்டு தன் மீதான ரசிகர்களின் எதிர்மறை எண்ணங்களை புறந்தள்ளி, மீண்டும் ரசிகர்களின் அன்புக்குரியவரானார் ஹார்திக் பாண்டியா. அவர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் 144 ரன்கள் மற்றும் 11 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
ஹார்திக் பாண்டியா தற்போது இந்திய அணிக்காக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தனது சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.