கோப்புப் படம் படம் | ஐபிஎல்
கிரிக்கெட்

சிஎஸ்கேவின் பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் நியமனம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

DIN

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஐபிஎல் தொடருக்கான அதிகாரபூர்வ அட்டவணை மற்றும் போட்டிகள் நடைபெறும் நகரங்கள் தொடர்பான விவரங்களை அண்மையில் ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது.

ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தங்களது பயிற்சியை விரையில் தொடங்கவுள்ளனர். அணி நிர்வாகங்கள் தங்களது அணிகளுக்கான பயிற்சியாளர்கள் மற்றும் உதவிப் பயிற்சியாளர்களை நியமிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

பந்துவீச்சு உதவிப் பயிற்சியாளர்

ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு உதவிப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரான ஸ்ரீதரன் ஸ்ரீராம் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

இடது கை சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ஸ்ரீதரன் ஸ்ரீராம் சிஎஸ்கேவின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங், பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி மற்றும் பந்துவீச்சு ஆலோசகர் எரிக் சைமன்ஸ் உடன் இணைந்து உதவிப் பயிற்சியாளராக செயல்படவுள்ளார்.

சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த டுவைன் பிராவோ கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட நிலையில், அந்த இடத்தை நிரப்பும் விதமாக ஸ்ரீதரன் ஸ்ரீராம் பயிற்சியாளராக அணியில் இணைந்துள்ளார்.

49 வயதாகும் ஸ்ரீதரன் ஸ்ரீராம் இதற்கு முன்பாக, ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகளின் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக செயல்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் தில்லி டேர்டவில்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் இணைந்து செயல்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு திருட்டைக் கண்டித்து செப். 6, 13-ல் தொடா் முழக்கப் போராட்டம்

பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகைகள் திருட்டு

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி: 50 தங்கத்துடன் இந்தியா சிறப்பிடம்

பொது இடங்களில் குப்பை கொட்டினால் நடவடிக்கை: கடலூா் ஆட்சியா் எச்சரிக்கை

ஏரியில் மூழ்கி 2 குழந்தைகள் பலி!

SCROLL FOR NEXT