விதர்பா அணி 373 ரன்கள் குவிப்பு படங்கள்: எக்ஸ் / பிசிசிஐ டொமஸ்டிக்
கிரிக்கெட்

ரஞ்சி இறுதிப் போட்டி: விதர்பா அணி 373 ரன்கள் குவிப்பு!

ரஞ்சி இறுதிப் போட்டி 2ஆம் நாளில் விதர்பா அணி 373 ரன்கள் குவித்துள்ளது.

DIN

ரஞ்சி இறுதிப் போட்டி 2ஆம் நாளில் விதர்பா அணி 373 ரன்கள் குவித்துள்ளது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் கேரளத்துக்கு எதிராக விதா்பா, முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 254 ரன்கள் சோ்த்திருந்தது.

8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 86 ரன்கள் சோ்த்து சதத்தை நோக்கி முன்னேறிய கருண் நாயா், ரன் எடுப்பதற்கான ஓட்டத்தில் மேல்வருடன் ஏற்பட்ட குழப்பத்தில் ரன் அவுட் செய்யப்பட்டாா்.

தற்போது 2ஆம் நாள் உணவு இடைவேளை வரை 373/9 ரன்கள் எடுத்துள்ளது.

டேனிஸ் மேல்வா் 153 ரன்கள் அடித்து அசத்தினார். 15 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

இந்தப் போட்டியில் கேரள அணி சார்பில் ஈடன் ஆப்பிள் டாம் 3 விக்கெட்டுகளும் நிதீஷ், பாசில் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்கள்.

ஒருவேளை ஆட்டம் டிரா ஆனால் முதல் இன்னிங்ஸ் ரன்களை அடிப்படையாக வைத்து வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவர்கள் என்பதால் இந்த இன்னிங்ஸ் முக்கியமானதாகும்.

முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள கேரள அணி வெற்றி பெறுமா என அந்த மாநில ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT