கௌதம் கம்பீர் 
கிரிக்கெட்

ரோஹித் நீக்கப்பட்டாரா? ஓய்வறை விவாதம் குறித்து பேச மறுத்த கம்பீர்!

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் செய்தியாளர் சந்திப்பில் கடுமையாக பேசியுள்ளார்.

DIN

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் செய்தியாளர் சந்திப்பில் உண்மை பேசுகிறேன் என கடுமையாக பேசியுள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் தொடரில் 2-1 என ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் இருப்பதால் இந்திய ரசிகர்களும் இந்திய அணியும் கலக்கத்தில் இருக்கிறார்கள்.

கேப்டன் ரோஹித் சர்மாவின் பேட்டிங் மோசமாக இருந்து வருகிறது. சிட்னியில் நாளை (ஜன.3) நடைபெறவுள்ள கடைசி டெஸ்ட்டில் ரோஹித் பங்குபெறுவாரா என கம்பீர் திட்டவட்டமாக எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது:

நேர்மை முக்கியம்

பயிற்சியாளருக்கும் வீரருக்கும் ஓய்வறையில் நடந்த விவாதம் அங்கேயே இருக்கட்டும். அதைப்பற்றி வரும் தகவல்கள் அனைத்தும் தகவல்கள் மட்டுமே. உண்மை இல்லை.

ஓய்வறையில் உண்மையான மனிதர்கள் இருக்கும்வரை இந்திய கிரிக்கெட் அணி பாதுகாப்பான இடத்திலேயே இருக்கும்.

நேர்மை மிகவும் முக்கியம். எந்தவொரு மாற்றமும் நேர்மையாக இருக்க வேண்டும்.

ஒருவரது செயல்பாடுகள் மட்டுமே அவரை இந்திய அணியின் ஓய்வறையில் இருக்க வைக்கும்.

ரோஹித் நீக்கமா?

ரோஹித்துடன் எல்லாம் சரியாக இருக்கிறது. தலைமைப் பயிற்சியாளராக நான் இங்கு இருக்கிறேன். அதுபோதும். பிட்ச் நிலைமையை பார்த்தபிறகு நாங்கள் பிளேயிங் லெவனை அறிவிப்போம்.

ஓவ்வொரு தனிப்பட்ட வீரரும் தங்களது குறைகளை அறிந்து வைத்துள்ளார்கள். நாங்கள் டெஸ்ட் போட்டியினை எப்படி வெல்வது என்பது குறித்து மட்டுமே பேசினோம்.

நான் எந்த ஒரு வீரரையும் குறிப்பிட்டு பேச விரும்பவில்லை. அணிக்குதான் முதல் முக்கியத்துவம். வீரர்கள் தங்களது இயல்பான ஆட்டத்தை ஆடலாம். ஆனால், குழு விளையாட்டில் ஓவ்வொரு தனி மனிதரும் பங்களிக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்முறையாக தேசிய விருது: சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.87.53 ஆக நிறைவு!

கேஷுவல் லுக்.. ஈஷா ரெப்பா!

வாத்தி படத்துக்காக ஜி.வி. பிரகாஷுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது!

முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

SCROLL FOR NEXT