கௌதம் கம்பீர், ஹர்சித் ராணா கோப்புப் படங்கள்.
கிரிக்கெட்

கௌதம் கம்பீர் சுயநலமற்றவர்..!ஆதரவாக பேசிய ஹர்ஷித் ராணா!

இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீருக்கு ஆதரவாக ஹர்ஷித் ராணா பேசியுள்ளார்.

DIN

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு ஆதரவாக ஹர்ஷித் ராணா பேசியுள்ளார்.

கம்பீர் தலைமையில் பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்திய அணி 1-3 என மோசமாக தோல்வியுற்றது. சொந்த மண்ணில் இந்தியா 0-3 என நியூசிலாந்திடம் படுதோல்வியடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் மூத்த வீரர்கள் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்படுவதற்கு கௌதம் கம்பீர் சரியான தேர்வல்ல என இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தனது விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.

மேலும் அவர் கூறுகையில், “தனியாளாக ஒட்டுமொத்த அணியின் உழைப்புக்கான பெயரை பிஆர் மூலமாக கம்பீர் பெற்றார்” என கடுமையாக விமர்சித்திருந்தார்.

தற்போது இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஹர்சித் ராணா கம்பீருக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார். தனது இன்ஸ்டா பக்கத்தில் ஹர்சித் ராணா கூறியதாவது:

தனிப்பட்ட பாதுகாப்பின்மையினால் ஒருவரை விமர்சிப்பது நல்லதல்ல. கௌதம் கம்பீர் தன்னைவிட மற்றவர்களின் நலனை நினைப்பவர்களில் ஒருவர்.

ஒருவரின் மோசமான நாள்களில் வீரர்களை நம்புகிறவராகவும் வீரர்களை புகழ் வெளிச்சத்தில் நிறுத்துபவராகவும் இருப்பவர் கம்பீர். அதை அவர் பலமுறை செய்திருக்கிறார். ஆட்டத்தை எங்கள் பக்கம் எப்படி திருப்புவது என்ற அறிவுடையவர் கம்பீர் எனக் கூறியுள்ளார்.

கம்பீருக்கு ஆதரவாக பதிவிட்ட ஹர்சித் ராணா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT