சாம் கான்ஸ்டாஸ் படம் | AP
கிரிக்கெட்

சாம் கான்ஸ்டாஸுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது: ஆஸி. மூத்த வீரர்

இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸுக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாக ஆஸ்திரேலிய மூத்த வீரர் தெரிவித்துள்ளார்.

DIN

இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸுக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாக ஆஸ்திரேலிய மூத்த வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் சாம் கான்ஸ்டாஸ் விளையாடினார். அறிமுகப் போட்டியிலேயே அதிரடியான ஆட்டத்தால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் கான்ஸ்டாஸ். அவர் அறிமுகப் போட்டியில் அதிரடியாக 65 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார்.

இந்தியாவுக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் கான்ஸ்டாஸ், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித் கணிப்பு

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் சாம் கான்ஸ்டாஸ் சேர்க்கப்பட்ட நிலையில், அவருக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாக இலங்கை டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒரு பேட்ஸ்மேனாக நீங்களாகவே சில விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். நீங்கள் எப்படி விளையாட வேண்டும் என நினைக்கிறீர்களோ அப்படி உங்களது ஸ்டைலில் விளையாட வேண்டும். ஏனெனில், இது உங்களது கிரிக்கெட் பயணம். உங்களது அனுபவங்களிலிருந்து நீங்கள் நிறைய கற்றுக் கொள்வீர்கள். சாம் கான்ஸ்டாஸ் விளையாடுவதை நான் பார்த்துள்ளேன். அவரால் அதிரடியாக மட்டுமின்றி ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்பவும் விளையாட முடியும்.

பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அழுத்தத்தை உருவாக்கும் திறன் அவருக்கு இருக்கிறது. அவர் அடுத்து விளையாடவுள்ள ஆட்டங்களிலிருந்து நிறைய கற்றுக் கொள்வார். அவருக்கு 19 வயதுதான் ஆகிறது. அவர் மிகவும் இளம் வீரர். அவருக்கு நிறைய அனுபவங்கள் கிடைக்கப் போகிறது. அதிலிருந்து அவர் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வார். அவருக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிட்வா புயல்: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

சிறுமி கொலை வழக்கு: தாய், ஆண் நண்பருக்கு ஆயுள் தண்டனை

மெட்ரோ ரயில் திட்ட விவகாரம்: மாநகராட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக உறுப்பினா்கள் வாக்குவாதம்!

நெசவு கூலித் தொகை ரூ.80 கோடியை விடுவிக்க கோரிக்கை

ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு ரூ.91 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT