ஸ்மிருதி மந்தனா (கோப்புப் படம்) படம் | ஐசிசி
கிரிக்கெட்

ஃபீல்டிங்கில் முன்னேற்றம் தேவை: ஸ்மிருதி மந்தனா

இந்திய அணியில் ஃபீல்டிங்கில் முன்னேற்றம் தேவை என அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

DIN

இந்திய அணியில் ஃபீல்டிங்கில் முன்னேற்றம் தேவை என அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராஜ்காட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஃபீல்டிங்கில் முன்னேற்றம் தேவை

ஒருநாள் தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ள நிலையில், அணியில் ஃபீல்டிங்கில் முன்னேற்றம் தேவை என கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நாங்கள் ஃபீல்டிங்கில் எங்களை முன்னேற்றிக் கொள்ள வேண்டும். அயர்லாந்து அணியை 180 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். இனிவரும் போட்டிகளில் ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்படுவோம். போட்டிகளின்போது, எங்களது திட்டங்களை சரிவர செயல்படுத்துவது மிகவும் முக்கியம். பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டோம். ஒவ்வொரு போட்டியிலும் இதுபோன்று பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட வேண்டும். பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டோம் என்றார்.

அயர்லாந்து அணி 56 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும், இந்திய அணி மூன்று கேட்ச்சுகள் மற்றும் ஃபீல்டிங்கில் சில தவறுகளை செய்ததால் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரிப் பகிர்வு: தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி, உ.பி.க்கு ரூ. 18,227 கோடி விடுவிப்பு!

சுவையிலும் தரத்திலும் மனதை நிரப்பியதா? Idly Kadai - திரை விமர்சனம் | Dhanush | Arun Vijay

தரக்குறைவாக பதிவிடும் திமுகவினரை கைது செய்யாதது ஏன்? தமிழிசை

"முதல்வர் வெட்கப்பட வேண்டும்!": அண்ணாமலை ஆவேசம்! | செய்திகள்: சில வரிகளில் | 01.10.25

வெள்ளை மலரே... ஜாஸ்மின் ராத்!

SCROLL FOR NEXT