சீன் அப்பாட் (கோப்புப் படம்) படம் | AP
கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இடம்பெறாதது ஏன்? ஆஸி. வேகப் பந்துவீச்சாளர் பதில்!

சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறாததற்கான காரணம் குறித்து ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் மனம் திறந்துள்ளார்.

DIN

சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறாததற்கான காரணம் குறித்து ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் சீன் அப்பாட் மனம் திறந்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபையில் அடுத்த மாதம் 19 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மற்ற அணிகளுக்கான ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடைபெறும் நிலையில், இந்தியாவுக்கான ஆட்டங்கள் துபையில் நடத்தப்படுகின்றன.

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தங்களது அணிகளை கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. இதுவரை நியூசிலாந்து, வங்கதேசம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியங்கள் சாம்பியன்ஸ் டிராபிக்கான தங்களது அணிகளை அறிவித்துள்ளன.

அணியில் இடம்பெறாதது ஏன்?

சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடைசி இரண்டு ஒருநாள் தொடர்களில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாததே சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறாததற்கான காரணம் என அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் சீன் அப்பாட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அணியின் தேர்வுக்குழு உறுப்பினர்களின் முடிவினை என்னால் தடுக்க முடியாது. இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான கடந்த ஐந்து போட்டிகளாக ஆஸ்திரேலிய அணிக்காக நான் சிறப்பாக செயல்படவில்லை. அணிக்காக எனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதே எப்போதும் எனது நோக்கமாக இருக்கும். சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார்கள். ஆஸ்திரேலிய அணி மிகவும் சிறப்பாக உள்ளது என்றார்.

சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசில்வுட் மற்றும் பாட் கம்மின்ஸ் முதல் மூன்று பிரதான பந்துவீச்சாளர்களாக இடம்பெற்றுள்ள நிலையில், நான்காவது பந்துவீச்சு தெரிவாக நாதன் எல்லிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காற்றே பூங்காற்றே... ரகுல் ப்ரீத் சிங்!

தில்லி கார் வெடிப்பு: பயங்கரவாத தாக்குதலாக அறிவித்தது அரசு!

கானாவில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கூட்டநெரிசல்! 6 பேர் பலி!

குடியிருப்புக்குள் உலா வந்த காட்டு யானை! மக்கள் அச்சம்!

பி என் காட்கில் ஜுவல்லர்ஸ் 2-வது காலாண்டு லாபம் இரட்டிப்பு!

SCROLL FOR NEXT