ஜஸ்பிரித் பும்ரா 
கிரிக்கெட்

ஐசிசி டிசம்பர் மாத சிறந்த வீரர் விருதை வென்றார் பும்ரா!

ஐசிசி டிசம்பர் மாத சிறந்த வீரர் விருதை ஜஸ்பிரித் பும்ரா வென்றுள்ளார்.

DIN

ஐசிசி டிசம்பர் மாத சிறந்த வீரர் விருதை ஜஸ்பிரித் பும்ரா வென்றுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மிகவும் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

டிசம்பர் மாதத்தில் பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 3 போட்டிகளில் பும்ரா 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தத் தொடரின் முடிவில் அவர் 32 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவரது சராசரி 14.22 ஆக உள்ளது.

தசைப் பிடிப்பின் காரணத்தினால் பும்ராவால் சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச முடியவில்லை. இதனால், பாதியில் விலகினார்.

பிரிஸ்பேன் மற்றும் மெல்போர்னில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஜஸ்பிரித் பும்ரா, இந்திய அணி தொடரை இழக்காமல் இருப்பதற்கு மிகுந்த உதவியாக இருந்தார்.

ஐசிசி டிசம்பர் மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு பத்தாண்டுகளுக்குப் பிறகு பார்டர் - கவாஸ்கர் தொடரை வென்றுக் கொடுத்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் டேன் பீட்டர்சன் இருவரும் சிறந்த வீரருக்கான போட்டியில் இடம்பெற்றிந்தனர்.

இருப்பினும், ஜஸ்பிரித் பும்ராவின் குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காக சிறந்த வீரர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரின் போது அவர் 200-வது டெஸ்ட் விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார். 200-விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது என்ற சாதனையையும் படைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணை மானபங்கப்படுத்த முயன்றவரை கைது செய்யக் கோரி பொதுமக்கள் மறியல்

தீண்டாமைக் கொடுமைக்கு விரிவான கலந்துரையாடல் அவசியம்

மீன்பிடிக்கும்போது கடலில் தவறிவிழுந்தவா் உயிரிழப்பு

ஹரியாணாவின் நூஹ் நகரத்தில் காங்கிரஸ் எம்எல்ஏவை சமூக ஊடகங்களில் அவதூறு செய்ததாக 6 போ் மீது வழக்கு

இளநிலை உதவியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT