ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஜான்சன் கோப்புப் படங்கள்.
கிரிக்கெட்

ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டனாக்குவது பிற்போக்குத்தனம்..! மிட்செல் ஜான்சன் ஆவேசம்!

இலங்கை தொடரில் ஸ்மித்தை கேப்டனாக நியமிப்பது குறித்து மிட்செல் ஜான்சன் விமர்சனம்.

DIN

இலங்கை தொடரில் ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டனாக நியமிப்பது பிற்போக்குத்தனமானது என முன்னாள் ஆஸி. வேகப் பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் கருத்து தெரிவித்துள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் தொடரில் ஆஸி. 3-1 என வென்றதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தேர்வானது. பாட் கம்மின்ஸ் தனது மனைவிக்கு குழந்தை பிறக்க உள்ளதால் விடுப்பில் சென்றுள்ளார்.

துணை கேப்டனாக இருக்கும் ஸ்டீவ் ஸ்மித் இலங்கை தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2018இல் பந்தினை சேதப்படுத்தியதற்காக இரண்டு ஆண்டுகள் கேப்டனாக தடை, ஓராண்டு விளையாட தடை விதிக்கப்பட்டது. இதனால் கம்மின்ஸ் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்றார்.

இந்த நிலையில் கம்மின்ஸுக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் அணித் தலைவராக நியமிப்பது குறித்து மிட்செல் ஜான்சன் கூறியதாவது:

பிற்போக்குத்தனமான முடிவு

பந்தினை சேதப்படுத்தியதாக இரண்டாண்டு கேப்டனாக செயல்பட தடைவிதிக்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித்தை மீண்டும் கேப்டனாக இலங்கை தொடரில் நியமித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

35 வயதில் மீண்டும் கேப்டனாக புத்துயிர்ப்படையும் ஸ்மித்தை பல ரசிகர்கள் அவரது தலைமைப் பண்பை பாராட்டுகிறார்கள். நான் இவர்களுக்கு மத்தியில் எனது கருத்தை பதிவு செய்கிறேன்.

கிரிக்கெட் வாழ்க்கை முடியும் தருவாயில் இருக்கும் ஸ்மித்தை இப்படி தற்காலிக கேப்டனாக நியமிப்பது டிராவிஸ் ஹெட் போன்றவர்களுக்கு வாய்ப்பை இழக்கச் செய்கிறது. இது ஒரு பிற்போக்குத்தனமான முடிவாகும்.

எனது கருத்து எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாவிட்டாலும் அணியின் நீண்ட கால முன்னேற்றத்தில் தேர்வுக்குழுவினர் தவறிழைத்து விட்டதை நினைத்து வெறுப்படைகிறேன் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாடா பவர் லாபம் ரூ.1,262 கோடியாக அதிகரிப்பு!

தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்! தனுஷுக்கு நன்றி!

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம்: அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

பிரபல கல்வியாளர் வசந்தி தேவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இந்தியாவுக்கு எதிராக பென் டக்கெட் - ஸாக் கிராலி இணை சாதனை!

SCROLL FOR NEXT