படம் | பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

டெஸ்ட் போட்டிகளில் முகமது ரிஸ்வான் புதிய சாதனை!

டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் புதிய சாதனை படைத்துள்ளார்.

DIN

டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் புதிய சாதனை படைத்துள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை 127 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

புதிய சாதனை

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 100 கேட்ச்சுகள் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனைப் பட்டியலில் முகமது ரிஸ்வான் இணைந்தார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் மட்டும் அவர் இரண்டு கேட்ச்சுகளை பிடித்தார்.

இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள முகமது ரிஸ்வான் 101 கேட்ச்சுகளைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

SCROLL FOR NEXT