கௌதம் கம்பீர் (கோப்புப் படம்) 
கிரிக்கெட்

கௌதம் கம்பீருக்கு இங்கிலாந்து பயிற்சியாளர் புகழாரம்!

இந்திய அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த கௌதம் கம்பீர் உதவுவார் என இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

DIN

இந்திய அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் உதவுவார் என இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் டி20 போட்டி நாளை மறுநாள் (ஜனவரி 22) கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

கௌதம் கம்பீர் வலிமையான தலைவர்

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிகவும் வலிமையான தலைவர் என இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

பிரண்டன் மெக்கல்லம் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கௌதம் கம்பீருடன் இணைந்து இதற்கு முன்னதாக பணியாற்றியுள்ளேன். அவர் மிகச் சிறந்த தலைவர். அவர் மிகவும் வலிமையானவர். அவரால் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்த முடியும். அவர் மிகவும் திறமைசாலி. அவரது திறமையைப் பயன்படுத்தி இந்திய அணி சிறப்பாக செயல்பட உதவுவார் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக செயல்படும் வழியை இங்கிலாந்து அணி கண்டுபிடிக்க வேண்டியிருக்கும் என்றார்.

கௌதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு, இந்திய அணி வரலாற்றுத் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், அவருக்கு பிரண்டன் மெக்கல்லம் புகழாரம் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT