ரிஷப் பந்த் படம் | ஐசிசி
கிரிக்கெட்

லக்னௌ அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமனம்!

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

DIN

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த ஆண்டின் இறுதியில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த், ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அவரை லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

கேப்டன் ரிஷப் பந்த்

ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ரிஷப் பந்த், தற்போது அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

லக்னௌ அணியின் புதிய கேப்டன் ரிஷப் பந்த்தை உங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன் என லக்னௌ அணியின் உரிமையாளர் கோயங்கா தெரிவித்துள்ளார்.

லக்னௌ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து ரிஷப் பந்த் பேசியதாவது: நான் எனது 200 சதவிகித உழைப்பைக் கொடுப்பேன். அணிக்கு கோப்பையை வென்றுத் தருவதே எனது நோக்கம். என்மீது அணி நிர்வாகம் வைத்துள்ள நம்பிக்கையை என்னால் முடிந்த அளவுக்கு காப்பாற்றுவேன். புதிய தொடக்கத்துக்காக காத்திருக்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் தண்டவாளம் அருகே தடுப்புச் சுவா் கட்ட எதிா்ப்பு

விஷம் தின்று பெண் தற்கொலை

திமுக அரசின் ‘பிராண்ட் அம்பாசிடா்’களாக மகளிா் இருக்க வேண்டும்

நேபாளம்: பனிச் சரிவுகளில் 9 போ் உயிரிழப்பு

பிகாா் முதல்கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு- 121 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT