ஆஸ்திரேலிய கேப்டன் தஹிலா மெக்ராத் படம் | ஐசிசி
கிரிக்கெட்

2-வது டி20: இங்கிலாந்துக்கு 186 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்துள்ளது.

DIN

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று (ஜனவரி 23) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆஸ்திரேலிய அணி முதலில் விளையாடியது.

ஆஸ்திரேலியா - 185/5

முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் தஹிலா மெக்ராத் 35 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, பெத் மூனி 44 ரன்களும், கிரேஸ் ஹாரிஸ் 35 ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் சார்லி டீன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஃபிரெயா கெம்ப் மற்றும் சோஃபி எக்கல்ஸ்டோன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

SCROLL FOR NEXT