மைக்கேல் கிளார்க் படம்: எக்ஸ் / கிரிக்கெட் ஆஸ்திரேலியா
கிரிக்கெட்

வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மைக்கேல் கிளார்க்!

முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்றதாக அறிவிப்பு.

DIN

முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்றதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

உலகக் கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் 64ஆவது நபராக ஆஸி. வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதன் விழா வியாழக்கிழமை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது எக்ஸ் பக்கத்தில், “8,600 டெஸ்ட் ரன்கள், 28 சதங்கள், சிட்னியில் முச்சதம் அடித்த ஒரே வீரர். முன்னாள் ஆஸி. கேப்டன் மைக்கேல் கிளார்க் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளது.

12 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் டெஸ்ட்டில் 8,643 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 7,981 ரன்களும் எடுத்துள்ளார். டெஸ்ட்டில் 49.10, ஒருநாள் போட்டிகளில் 44.58 சராசரி வைத்துள்ளார்.

சிட்னியில் அதிகபட்சமாக 329 ரன்கள் அடித்து அசத்தினார். 35 டெஸ்ட் இங்கிலாந்துடனும் 22 டெஸ்ட் இந்தியாவுடனும் விளையாடி 56க்கும் அதிகமாக சராசரி வைத்திருக்கும் வீரர் மைக்கேல் கிளார்க்.

43 வயதாகும் கிளார்க் 2013/14 சீசனில் 5-0 என ஆஷஸ் தொடரினையும் 2015இல் ஒருநாள் உலகக் கோப்பையும் வென்றது மறக்க முடியாத நிகழ்வாக இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்துக்கு கூடுதலாக 350 எம்பிபிஎஸ் இடங்கள்: என்எம்சி அனுமதி

உரப் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

50,000 விவசாய மின்இணைப்புகள் வழங்க தமிழக அரசு ஒப்புதல்

மதமாற்ற தடைச் சட்டங்களுக்கு எதிரான மனு: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

பிரதமா் மோடிக்கு இன்று 75-ஆவது பிறந்த நாள்- பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் தொடக்கம்

SCROLL FOR NEXT