முகப்பு
கிரிக்கெட்

புதிய உலக சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்..! எதில் தெரியுமா?

ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

Updated On : 29 ஜனவரி 2025, 7:00 pm IST
ஸ்டீவ் ஸ்மித் - படம்: ஏபி
பகிர்:

ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான போட்டியில் தனது 35ஆவது சதத்தை நிறைவு செய்துள்ளார். மேலும் தனது 10,000 டெஸ்ட் ரன்களை கடந்து அசத்தியுள்ளார். ஆஸி. வீரர்களில் நான்காவதாகவும் உலக அளவில் 15ஆவது பேட்டராகவும் இருக்கிறார்.

டெஸ்ட்டில் 10,000 ரன்கள், 5,000 ஒருநாள் ரன்கள், 1,000 டி20 ரன்கள், 50க்கும் அதிகமான சர்வதேச விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

Advertisement

Advertisement

ஸ்டீவ் ஸ்மித் முதலில் சுழல்பந்து வீச்சாளராக அறிமுகமாகி தற்போது தலைசிறந்த டெஸ்ட் பேட்டராக முன்னேறியுள்ளார்.

குமார் சங்ககாரா, ஜெயவர்தனே பேட்டிங்கில் இதை முன்னமே நிகழ்த்தியிருந்தாலும் பந்துவீச்சில் இந்தளவுக்கு எதுவும் சாதிக்கவில்லை.

ஆஸி.யில் ரிக்கி பாண்டிங், ஆலன் பார்டர், ஸ்டீவ் வாக் இதற்கு முன்னதாக 10,000 ரன்களை கடந்துள்ளார்கள்.

தலைசிறந்த ஆல்ரவுண்டரான ஜேக் காலிஸ் குறைவான டி20களில் மட்டுமே விளையாடியதால் துரதிஷ்டவசமாக அவரால் இந்தப் பட்டியலில் இடம்பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த அளவில் 15,921 ரன்களுடன் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.