படம் | AP
கிரிக்கெட்

ஹார்திக் பாண்டியா, ஷிவம் துபே அதிரடி: இங்கிலாந்துக்கு 182 ரன்கள் இலக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்துள்ளது.

DIN

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி புணேவில் இன்று (ஜனவரி 31) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.

டாப் ஆர்டர் தடுமாற்றம்

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். இன்றையப் போட்டியிலும் சஞ்சு சாம்சன் பெரிய அளவில் ரன்கள் குவிக்கத் தவறினார். அவர் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து, திலக் வர்மா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இருவருமே 0 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அவர்களது விக்கெட்டினை சாக்யூப் மஹ்முத் வீழ்த்தினார். இந்திய அணி 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஹார்திக் பாண்டியா, ஷிவம் துபே அதிரடி

இந்திய அணி 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற, அபிஷேக் சர்மா மற்றும் ரிங்கு சிங் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடினர். அபிஷேக் சர்மா 19 பந்துகளில் 29 ரன்கள் (4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்), ரிங்கு சிங் 26 பந்துகளில் 30 ரன்கள் (4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்திய அணி 79 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான சூழலில் இருந்தபோது, ஷிவம் துபே மற்றும் ஹார்திக் பாண்டியா இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டது. அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். ஹார்திக் பாண்டியாக 30 பந்துகளில் 53 ரன்கள் (4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்), ஷிவம் துபே 34 பந்துகளில் 53 ரன்கள் (7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் சாக்யூப் மஹ்முத் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜேமி ஓவர்டான் 2 விக்கெட்டுகளையும், பிரைடான் கார்ஸ் மற்றும் அடில் ரஷீத் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய உச்சத்தில் தங்கம் விலை: பவுன் ரூ.79,000-ஐ நெருங்குகிறது!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி!

இங்கிலாந்து தமிழர்களின் அன்பால் அரவணைக்கப்பட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு: பயணிகள் அவதி!

தமிழக காவலர்கள் மீது கல்வீச்சு: வடமாநில தொழிலாளர்களுக்கு சிறை!

SCROLL FOR NEXT