ஷிவம் துபே முதல் அரைசதம்: நெதர்லாந்துக்கு 194 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!
இந்திய அணி நெதர்லாந்துக்கு எதிராக பேட்டிங் விளையாடியது குறித்து...
நெதர்லாந்துக்கு எதிராக விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 193/6 ரன்கள் குவித்துள்ளது.
இந்தப் போட்டியில் இந்திய வீரர் ஷிவம் துபே 25 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார்.
டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்ய, அபிஷேக் டக் அவுட்டானார். இஷான் கிஷனும் ஆட்டமிழக்க சூர்யகுமார் மற்றும் துபே பொறுமையாக விளையாடினார்கள்.
Advertisement
Advertisement
இறுதியில் துபே, பாண்டியா அதிரடியாக விளையாடி ஆட்டத்தை மாற்றினார்கள்.
குறிப்பாக, மிகவும் அதிரடியாக விளையாடிய ஷிவம் துபே 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
டி20 உலகக் கோப்பையில் ஷிவம் துபே தனது முதல் அரைசதத்தினை பவுண்டரி அடித்து நிறைவேற்றினார்.
நெதர்லாந்து அணியினர் ஃபீல்டிங்கில் சில கேட்ச்களை தவறவிட்டனர்.
அந்த அணியின் சார்பில் ஆர்யன் தத் 4 ஓவர்கள் வீசி 19 ரன்களை மட்டுமே கொடுத்த அவர் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
வான் பீக் 3 விக்கெட்டுகள் எடுத்தாலும் 56 ரன்களை விட்டுக்கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
ஹார்திக் பாண்டியா 30 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று லாங்-ஆஃபில் ஆட்டமிழந்தார்.
Shivam Dube's maiden half-century: India set a target of 194 runs for the Netherlands!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.