FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

முதல் டி20: அஸ்மதுல்லா ஓமர்ஸாய் அரைசதம்; இந்தியாவுக்கு 157 ரன்கள் இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்துள்ளது.

52 வினாடிகள் முன்பு
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான முதல் டி20 போட்டி தில்லியில் உள்ள அருண் ஜெட்லி திடலில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆப்கானிஸ்தான் முதலில் விளையாடியது.

அஸ்மதுல்லா ஓமர்ஸாய் அரைசதம்; இந்தியாவுக்கு 157 ரன்கள் இலக்கு!

Advertisement

Advertisement

முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியில் டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டர்கள் பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை. அந்த அணி 43 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து, அஸ்மதுல்லா ஓமர்ஸாய் மற்றும் முகமது நபி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்மதுல்லா ஓமர்ஸாய் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, முகமது நபி 27 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜஸ்பிரித் பும்ரா, அக்‌ஷர் படேல் மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.

summary

Batting first in the first T20 match against India, the Afghanistan team scored 156 runs for the loss of 8 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments