விராட் கோலி  PTI
கிரிக்கெட்

12 ஆண்டுகளுக்குப் பிறகு களமிறங்கிய கோலி! 6 ரன்களில் அவுட்!

ரஞ்சி கோப்பையில் தில்லி - ரயில்வேஸ் அணி ஸ்கோர் விவரம்...

DIN

ரஞ்சி கோப்பையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு தில்லி அணிக்காக களமிறங்கிய விராட் கோலி வெறும் 6 ரன்களில் அவுட்டானார்.

ரஞ்சி டிராபிக்கான தில்லி மற்றும் ரயில்வேஸ் அணிகள் விளையாடும் போட்டி தில்லியில் உள்ள அருண் ஜேட்லி கிரிக்கெட் திடலில் நடைபெற்றுவருகிறது.

சர்வதேசப் போட்டிகளில் சரியாக விளையாடாத இந்திய கிரிக்கெட் வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாட அறிவுறுத்தப்பட்டனர். மேலும், இந்திய வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது கட்டாயமாக்கி பிசிசிஐ விதிமுறைகளில் திருத்தமும் மேற்கொள்ளப்பட்டது.

இதனால், ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், ஜெய்ஸ்வால் உள்ளிட்ட வீரர்களும் அவரவர் மாநில அணிகளுக்காக விளையாடினர். முதல் சுற்றில் விராட் கோலி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் விளையாடவில்லை.

இந்த நிலையில், ரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் தில்லி அணிக்காக விராட் கோலி வியாழக்கிழமை களமிறங்கினார்.

ரயில்வேஸ் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில், முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தில்லி அணி 97 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகின்றது.

12 ஆண்டுகளுக்குப் பின்னர் உள்ளூர் சிவப்புப் பந்து போட்டிகளில் களமிறங்குவதால் விராட் கோலி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், 15 பந்துகளில் 6 ரன்களுக்கு ஹிமான்ஷு சங்வான் பந்தில் போல்டானார்.

இதனால் மைதானத்தில் குவிந்திருந்த கோலியின் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT